இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில்நடிகர் விஜய் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் அரசாங்கம் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசப் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதனால் சர்க்கார் படத்தில் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக காவல்துறையில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது இதன் காரணமாகசர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்இது தொடர்பாக மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அரசின் இலவசப் பொருட்களை வீசுவது போல காட்சி அமைத்தது தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு இரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை செய்த திரைபடத்திற்குத் தடை விதிக்க முடியாது என்றும் தனது உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.