கேஜிஎஃப், கேஜிஎஃப் -2 என்ற இரண்டு படங்களையும் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை தயாரித்து வருகிறது. அடுத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கெங்கரா அடுத்து இயக்கும் படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏப்ரல் 21 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்இந்த நிலையில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து வாரிசு நடிகர் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்கன்னட நடிகர் ராஜ்குமார் அவருக்கு பின் அவரது மூன்று மகன்களும் கன்னட சினிமாவில் கதாநாயகர்களாக நடித்து வந்தனர் இந்த நிலையில் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அகால மரணமடைந்தார் அவர்களது குடும்பத்தில் இருந்து
மூன்றாவது தலைமுறை நடிகராக ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் யுவராஜ்குமார் அறிமுக ஆகிறார் இவர் அறிமுகமாகும் படத்தை கன்னட சினிமாவில் ராஜகுமாரா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் படங்களை இயக்கிய சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்குகிறார்