மோகன்தாஸ் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து  தமிழ்த் திரையுலகில் தன்னை நடிகராக நிலை நிறுத்தி கொண்டவர்விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்து தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின்இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார். ‘மோகன்தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.
‘மோகன்தாஸ்’ படத்தை ‘களவு’ படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம்  ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு நாயகியாக  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன்பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்
‘மோகன்தாஸ்’ படக்குழுவினர் விவரம்
கதை, திரைக்கதை இயக்கம்: முரளி கார்த்திக்
தயாரிப்பு நிறுவனம்: வி.வி ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்: விஷ்ணு விஷால்
ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன்
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
எடிட்டர்: கிருபாகரன்
வசனங்கள்: அரவிந்த் முரளி, முரளி கார்த்திக்
சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு: அன்பறிவ்
ஆடை வடிவமைப்பாளர்: பூர்த்தி ப்ரவீன்
கலை இயக்குநர்: அருண்சங்கர் துரை
கிரியேடிவ் தயாரிப்பாளர்: அனிதா மகேந்திரன்