இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ் படங்கள்

தமிழ் சினிமாவர்த்தகத்திலும் பொது சமூகத்திலும் பரியேறும் பெருமாள் படத்திற்கு பின்அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் அசுரன்

2020 ஆம் ஆண்டுக்கான 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலை இன்று (டிசம்பர் 19) மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ் திரைப்படங்களான வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த அசுரன், இன்னும் திரைக்கு வராததேன் ஆகிய படங்கள்இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனதேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடக்கவிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு இந்தியன் பனோரமா பிரிவில் இத்திரைப்படங்கள் திரையிடப்படும்.

183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தேர்வு குழுவின் தலைவராக  திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் மேத்யூ மட்தான் இருந்தார். உறுப்பினர்களாக திரைப்பட துறையை சேர்ந்த 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றவர் நடன இயக்குனர் திருமதி கலா மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது