தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தலை வரும் 25/01/2022 அன்று நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டு, தேர்தலை நடத்துவதற்கு உரிய அனுமதியைப் பெறுவதற்கு மாநகராட்சியிடமும், காவல்துறையினரிடமும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கோரியது.
- இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கு மாநகராட்சியும், காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளது.இது தொடர்பாக தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தலை வரும் 25/01/2022 அன்று நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டு, தேர்தலை நடத்துவதற்கு உரிய அனுமதியைப் பெறுவதற்கு மாநகராட்சியிடமும், காவல்துறையினரிடமும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கோரியது.ஆனால், மாநகராட்சியும், காவல்துறையும் கொரோனா தொற்று சென்னையில் கடுமையாக இருப்பதை சுட்டிக் காட்டி அனுமதியை மறுத்துள்ளனர். எனவே, தேர்தல் நடத்தும் தேதி நிலைமைகள் சீரடைந்த பிறகு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.