வில் ஸ்மித்துக்குநன்றி கூறிஆஸ்கர் விழாவில் பங்கேற்க தடை விதித்த அகாடமி

94-வது ஆஸ்கர் அகாடமி விருது விழாவில்(28.03.2022)தனது மனைவியை உருவக் கேலி செய்தததற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கை விழா மேடையில் வைத்தே கன்னத்தில் அறைந்திருந்தார் வில் ஸ்மித் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது  இந்த விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கிறிஸ் ராக். இதனால் கோபமான வில்ஸ்மித் மேடையேறி சென்று கோபத்துடன்கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். நிகழ்ச்சியை உலகம் முழுவதும் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கும் அரங்கத்தில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வில் ஸ்மித் பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ்எனஅவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுநாள் கடிதம் ஒன்றை வெளியிட்டார் அதில்
எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது, அழிக்கக்கூடியது. கடந்த இரவில் அகாடமி விருதுகளின் போது என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. என்னை பற்றிய ஜோக்குகள் என் பணியின் ஒரு பகுதிதான், ஆனால் ஜடாவின் மருத்துவ ரீதியிலான பிரச்னை பற்றிக் கிண்டலாகக் குறிப்பிட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. நான் உணர்ச்சி வசப்பட்டு அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளேன்.
பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை.
அகாடமியிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், நிகழ்வின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், உலகெங்கிருந்தும் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரிடமும், வில்லியம்ஸ் குடும்பத்திடமும், கிங் ரிச்சர்ட் குடும்பத்திடமும். அற்புதமான ஒரு நிகழ்வாக இருந்திருக்க வேண்டியது என்னால் கறை படிந்ததற்கு என்னுடைய நடத்தை குறித்து நான் ஆழமாக வருந்துகிறேன்.என்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டு இருந்தார் வில்ஸ்மித்.
இருந்தபோதிலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற நிலை உருவானபோதுஆஸ்கர் கமிட்டியில் தான் வகித்த பொறுப்பை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். இந்நிலையில் இதுதொடர்பாக வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் குழு நேற்று விசாரணை நடத்தியுள்ளனர் பின்னர் ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க

வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி குழுவினர் அறிவித்ததுடன் அசாதரமான சூழலில் அமைதி காத்து பொறுமையை கடைப்பிடித்தமைக்காக
வில் ஸ்மித்துக்கு நன்றி தெரிவித்துள்ளது அகாடமி குழு