தனது நீலம் புரடொக்ஷன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகியோர்கள் படங்களை இயக்குவதாக அறிவித்தார்.
ரஞ்சித் அண்ணா கூப்பிட்டு என்ன கதை அதை சொல் என்று கேட்டார். அப்போது நான் தயாராக வைத்திருந்த மூன்றுகதைகளை சொன்னேன். அதில் அவர் தேர்வு செய்தது ரைட்டர் கதையை. அதோடு இந்த கதையில் சமுத்திரகனி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரே நடிகரையும்தேர்வு செய்தார். காலா படத்தில் சமுத்திரகனியோடு பணியாற்றியதால் அவரிடம் கதை சொன்னதுமே ஒப்புக் கொண்டார்.
இப்படித்தான் ரைட்டர் உருவானது. சமுத்திரகனி ஒரு காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிக் கொண்டு அதிகார வர்க்கத்துக்கும், நடுத்தர குடும்ப வாழ்க்கைக்கும் இடையில் நடத்தும் தனி மனிதபோராட்டம்தான் திரைக்கதை. காவல் துறைக்கும், மக்களுக்குமான இடைவெளியை இந்த படம் குறைக்கும். காவல்துறையில் உள்ளவர்களும் நம்மை போன்ற சராசரி மனிதர்கள்தான் என்ற எண்ணத்தை மக்களிடம் இந்தப் படம் கொண்டு செல்லும்என்கிறார் இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப்