காட்டேரி படக்குழு வதந்தியை பரப்புகிறது திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிசம்பர்.25) வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் படத்தின் வெளியீடு தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத் தன்மையைக் கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பல்வேறு கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ஆம் தேதி வெளிவர இருக்கும் “காட்டேரி” திரைப்பட வெளியீட்டைத் தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியன்கூறியிருப்பதாவது….
ஸ்டுடியோகிரீனின் இந்த அறிவிப்பு மிகவும்வருத்தமளிக்கக்கூடியது.

எங்கள்சொந்தக்காரணங்களுக்காகபடத்தை வெளியிடவில்லை என்று சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து கொரோனா இரண்டாம் அலை என்கிற தேவையில்லாத வதந்தியைப் பரப்புவது மிகவும் வருந்தத்தக்கது. மத்திய அரசின் சுகாதார வழிகாட்டுக்குழு நேற்றைய முன் தினம் நடத்திய கூட்டத்தில், கொரோனா இரண்டாம் அலைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை என்று தெளிவாகச்சொல்லியிருக்கிறது.
அப்ப்டியிருக்கும்போது இவர்கள் இப்படிச்சொல்வதுவருத்ததுக்குரியதுநேற்றைய தினம் வெளியான வொண்டர் வுமன் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரையரங்குகளுக்கு ஏராளமான மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு வதந்தியைப் பரப்பவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.