பாதிக்கிணறு தாண்டிய விஜய் பட இயக்குனர் பட அறிவிப்பு எப்போது?

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். தமன் இசையமைக்கவிருக்கிறார்.இவை எல்லாமே முடிவாகி முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரைவரவில்லை.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியன்று விஜய் 65 பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.அதற்குக் காரணம் படத்தின் மொத்த திரைக்கதையும் தயாரான பின்பு படம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று விஜய் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.அதன்படி, மொத்த திரைக்கதையையும் உருவாக்கி விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் முருகதாஸ். அதில்; இடைவேளை வரையிலான திரைக்கதை விஜய்க்குப் பிடித்திருக்கிறது. இரண்டாம்பாதியில் சில மாற்றங்கள் இருந்தால் நல்லது எனச் சொல்லியிருக்கிறாராம்.பாதிக் கிணறு தாண்டிய முருகதாஸ் மீதிக்கிணறையும் தாண்டும் முயற்சியாக இரண்டாம் பாதியைச் சரி செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறாராம். அது முடிவடைந்து விஜய் சம்மதம் சொன்ன பின்புதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.