மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்
வெங்கட்பிரபு தெலுங்கில்இயக்கியுள்ள
படம் “கஸ்டடி” இந்த படம் தமிழிலும்
மொழி மாற்றம் செய்யப்பட்டு
வெளியிடப்பட உள்ளது
‘கஸ்டடி’ படத்தில் நடிகர் நாக சைதன்யா
நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு
முடிவடைந்து இறுதிகட்ட பணிகள்
நடைபெற்று வருகின்றன
படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான
க்ளிம்ப்ஸ் நாக சைதன்யா ரசிகர்களுக்கு
பிடித்திருந்தது மற்றும் கீர்த்தி
ஷெட்டியின் கதாபாத்திர போஸ்டர் படம்
குறித்தான ஆர்வத்தையும்
அதிகரித்துள்ளது
தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்க்கும்
வகையில் பிரபலமான நடிகர்
அரவிந்த் சுவாமிஇப்படத்தில் ராஜு என்ற
ராசு கதாபாத்திரத்தில் நடிக்க
வைக்கப்பட்டுள்ளார்
அவர் சம்பந்தமான போஸ்டர் ஒன்றை
தயாரிப்பு நிறுவனம் நேற்று
மாலைவெளியிட்டுள்ளது
அதில் மதுபாரில் கைவிலங்குடன்
அரவிந்த் சுவாமி இருக்கிறார். இந்த
அச்சுறுத்தும் தோற்றம் படம்
ஆக்க்ஷன் த்ரில்லர் வகையான படம்
என்பதை பார்வையாளனுக்கு
உணர்த்துவதுடன்
படம் மீதான எதிர்பார்ப்பை
அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி
ஷெட்டி மற்றும், ப்ரியாமணி
சரத்குமார், சம்பத் ராஜ்,
பிரேம்ஜி, கிஷோர், பிரேமி விஸ்வநாத்
உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நாகசைதன்யா நாயகனாக நடித்த
தெலுங்குபடங்களில்அதிக செலவில்
தயாரிக்கப்பட்ட படங்களில் ‘கஸ்டடி’யும்
ஒன்று என்கிறது படத்தை தயாரித்துள்ள
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்
கஸ்டடி மே 12, 2023 அன்று உலகம்
முழுவதும் திரையரங்குகளில்
வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Sign in