நாயகனின் அம்மாவாக தேவதர்ஷினி, நாயகனின் அண்ணனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடை
அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என படத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். எல்லோருமே திரைக்கதை தேவைக்காக இருக்கிறார்கள்.
ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருடைய அனுபவம் இந்தப்படத்தின் காட்சியமைப்புகள் நேர்த்தியாக அமைந்திருப்பதோடு கதாநாயகனுக்குப் பலமாகவும் அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர்சாம்.சி.எஸ்
படம் தடுமாற்றம் இன்றி ஜெட் வேகத்தில் வேகமாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து தனது வேலையை செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல்.
எழுதி இயக்கியிருக்கும் அனலரசு, தன் பெயரைப் போலவே படத்திலும் அனல் பறக்க வேண்டும் என்று நினைத்து உழைத்திருக்கிறார்.