உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலகத் தலைவன்’

இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் கடந்த மே மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி இதற்கு பின் படங்களில் அவர் நடிக்க மாட்டார் முழு நேர அரசியல் பணிக்கு சென்றுவிடுவார் என கூறப்பட்டது உதயநிதியும் அதனை அவ்வப்போது உறுதிப்படுத்திவந்தார் இந்நிலையில்,  ‘மீகாமன்’, ‘தடம்’ படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது
 இந்தப் படத்திற்கு, ‘கலகத் தலைவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.