எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம் பாடல்

வீடியோ ஆல்பம் பாடல் தயாரிக்கும்முயற்சிகள் தற்போது பரவலாக நடந்து வருகின்றன. அப்படி ஒரு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள பாடல்தான் ‘எது நிஜம் என் கண்மணி’
இந்த ஆல்பம் பாடலை விவேக் கைப்பா பட்டாபிராம் இயக்கியுள்ளார்.தெலுங்கு நடிகர் விஸ்வந்த் டுடும்புடி நாயகனாகவும்

மேகலை மீனாட்சி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்தமிழ்,தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்திற்கு இசை அமைத்துள்ளார்சுபாஷ் ஆனந்த்டி.சி.பி. உதய் நடனம் அமைத்துள்ளார்.இந்த ஆல்பம் பாடலை இயக்கி உள்ள விவேக் கைப்பா பட்டாபிராம்  உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

திரைப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் போல் இந்தப் பாடலை உருவாக்கி உள்ளார். ஒரு திரைப்படத்திற்கான பாடல் உருவாக்கத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் இதில் செய்துள்ளார். அது மட்டுமல்ல திரைப்படத்தில் வரும் பாடலைத் தாண்டி ஒரு புது முயற்சியாக புது பாணியில் புது வடிவத்தில் தெரியும்படி தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து இப்பாடலை உருவாக்கி இருக்கிறார்.இந்தப் ஆல்பம் பாடலை ஜெயண்ட் மியூசிக் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். இந்த ஆல்பம் பாடல் ‘சின்னஞ்சிறு மழைத்துளியே சிறு காட்சிப் பிழையே’ என்று தொடங்குகிறது.

“இந்தப் பாடலை எழுத இயக்குநர் எஸ். பி .ஹோசிமினிடம் தயக்கத்தோடு கேட்டபோது அவர் முழு மனதோடு ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துள்ளார்