இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு. இவர்களைத் தாண்டி சாந்தினி ஒரு பக்கம்.இவர்கள் எல்லோரும் அந்த பொக்கிசத்துக்குக் குறி வைக்கிறார்கள். யாருக்குக் கிடைத்தது? என்னென்ன நடந்தன? எனும் கேள்விகளுக்கான விடைகள் தாம் படம்.
வேதிகா மூலமாக மொத்தக் கதையும் சொல்லப்படுவதால் அவருக்கான முக்கியத்துவம் படத்தில்அதிகம்.
வில்லத்தனம் கலந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் சாந்தினி. அவருடைய தோற்றமும் நடிப்பும் பயமுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
யோகிபாபு, நான்கடவுள் ராஜேந்திரன் ஆகிய இருவரும் பயச்சுவை மிகுந்த படத்தில் நகைச்சுவை செய்துலகுவாக்குகிறார்கள்.
பிரதாப்போத்தன்,வேலுபிரபாகரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.அடர் வனம், பல்வேறு வனவிலங்குகள் மற்றும் யாளி ஆகியன நன்றாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
அச்சு ராஜாமணியின் இசையில்,போலாம் போலாம் ரைட் மற்றும் சிவன் பாடல் முன்னணி வகிக்கின்றன. மற்ற பாடல்களும் கேட்கலாம். பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்குப் பயன்பட்டிருக்கிறது.
ஒரு மையக்கதை சில கிளைக்கதைகள் ஆகியன படத்தில் இருந்தாலும் அதனால் தொய்வோ சலிப்போ ஏற்பட்டுவிடாதபடி படத்தைத் தொகுத்துள்ளார் கே.எம்.ரியாஷ்.
பிரபதீஸ் சாம்ஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.எடுத்துக் கொண்ட கதைக்களத்தின் சுவாரசியத்தைக் கூட்ட தேவையான அளவு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
பாட்டி காலத்துப் பழைய கதை என்றாலும் திகிலூட்டும் திரைக்கதை, கணினி வரைகலை ஆகியனவற்றின் மூலம் புதிதாக்க முயன்றிருக்கிறார்.