தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். இந்தி பற்றி நீங்கள் கேட்கும் கேள்வியே தவறானது. ஆமீர்கான்சென்னை வந்த போதும் இந்தி திணிப்பு பற்றி கேள்வியை கேட்டீர்கள் எதற்காக அந்த கேள்வியை கேட்டீர்கள் என எனக்கு இன்னும் புரியவில்லை என்றார்.ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைப், ராதிகா சரத்குமார், சண்முகராஜேஷ்வரன் நடிப்பில் ஜனவரி12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘
மெர்ரி கிறிஸ்துமஸ்
இந்தப்படத்தின் புரமோஷனுக்காக சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று மாலை படக்குழுவினர் சந்தித்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய்சேதுபதி, 96 படம் பார்த்துவிட்டு இயக்குநர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அரை மணிநேரம் பேசினோம். அவருடைய முதல் படம் என்னுடைய பிறந்தநாள் அன்று வெளியானது. அப்போது என் நண்பர் ஒருவர் என்னிடம், ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநர், ஸ்ரீராம் ராகவன் படம் இயக்கியிருக்கிறார்என கூறினார். அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்தது.
அவர்மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் கதை சொன்னார் பிடித்திருந்தது. கத்ரீனா கைஃபை நேரில் பார்த்தது எனக்கு ஒரு ஆச்சரியம். நம்மை விட சீனியர் நடிகை என்ற பயம் எனக்குள் இருந்தது. அவரிடம் எந்த தலைக்கணமும்இல்லை. அவருடன் பணியாற்றியது மிகவும் கம்பர்டபிளாக இருந்தது. நாங்கள் எல்லோரும் படத்தைப்பார்த்துவிட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்றவர், இந்தி சினிமாவில் நடிக்க சென்ற போது சில படங்களோடு எனக்கான வாய்ப்பு முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால் இந்தி ரசிகர்கள் எனது நடிப்பை ரசித்து ஏற்றுக்கொண்டதை தான் எதிர்பார்க்கவில்லை. நான் பேசும் இந்திமொழி உச்சரிப்பு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் பார்ஸி, மற்றும் ஜவான் படங்கள் என்னை இந்திரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.அந்தப்படங்களின் வெற்றி நான் பேசும் இந்தியை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது

பார்ஸி, ஜவான் கொடுத்த நம்பிக்கை இன்னும் அதிகமான இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தன்னை யோசித்து கதை எழுதுவதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, ஆமிர்கான் வந்தபோது கூட இந்தி தொடர்பான கேள்வியை கேட்டீர்கள். அந்த கேள்வி எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை. இப்போது என்னிடமும் கேட்கிறீர்கள். தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். உங்களின் கேள்வியே தவறானது. இங்கே எல்லோரும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லைஎன்றார்.