தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு உச்ச கட்டகவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் நடிகைசமந்தா. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதனால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் முன்னணி இந்தி நடிகை ஒருவர் சமந்தா ஆடியது போன்று நடனத்தை ஆடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் தற்போது நடிகை அஞ்சலி தெலுங்கில் நிதின் நாயகனாக நடித்து வரும் ‛மச்சேர்லா நியோஜெகவர்கம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். அந்த பாடலில் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியது போன்ற உடையில்தோன்றுகிறார் அஞ்சலி. அதுகுறித்த போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும் நிசப்தம் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரணின் 15வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் அஞ்சலி, ஜான்சி என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்த அஞ்சலிக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புக்கள் குறைந்து வந்த நிலையில் தெலுங்கு பக்கம் போனார் அங்கும் அவருக்கு குறிப்பிடும்படியான வாய்ப்புக்கள் அமையவில்லை சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இதன் மூலம் கிளாமராகவும் அஞ்சலி நடிப்பார் என்பதால் தற்போது வாய்ப்புக்கள் குவியத்தொடங்கியுள்ளது நடிகை அஞ்சலிக்கு

.