ஸ்ருதி ஹாசன் தயாரித்த இசை ஆல்பத்தில் நடித்த இயக்குநர் லேகேஷ் கனகராஜ் தான் இயக்கும் கூலி படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்
Related Posts
“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛கூலி’. கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து வரும் நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு நடிகர்களின் அறிவிப்பு போஸ்டர் உடன் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மலையாள நடிகர் சவுபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக பிரீத்தி என்ற வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த படம் மூலம் முதன்முறையாக ரஜினி, லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். அதேசமயம் இதற்கு முன் ஸ்ருதிஹாசன் உருவாக்கிய இசை ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்தது குறிப்பிடத்தக்கது.”