கேம் சேஞ்சர் வசூலை கலாய்த்த இயக்குநர்ராம் கோபால் வர்மா

ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேக்கிங் தரத்துடனும், ‘புஷ்பா 2’ வசூலுடனும் ஒப்பிட்டு ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில்ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளஇப்படம் ஜனவரி10 ஆம் தேதி வெளியானது. கடுமையான எதிர் விமர்சனங்களை எதிர்கொண்ட அப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் 186 கோடி ரூபாய் மொத்தவசூல் செய்து உள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அதற்கு காரணம்இந்திய அளவில் முதல் நாள் மட்டுமே ‘கேம் சேஞ்சர்’ குறிப்பிடத்தக்க வசூல் செய்தது. அடுத்து வந்த நாட்களில் வசூலில்
பெரும் சரிவு ஏற்பட்டது என்பதைவர்த்தக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஐந்தாவது நாள் முடிவில்தான், இந்திய அளவில் ரூ.100 கோடி வசூலைத் தொட்டுள்ளது ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம்.
450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ‘கேம் சேஞ்சர்’ வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என்பதையே வசூல் விவரங்கள் காட்டுகின்றன. இந்தப் பின்னணியில்தான், முதல் நாளில் ‘ரூ.186 கோடி வசூல்’ என்ற படக்குழுவின் அதிகாரபூர்வ தகவலை முன்வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தை ராம் கோபால் வர்மா கலாய்த்துள்ளார்.

அந்த பதிவில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பட்ஜெட்450 கோடி ரூபாய்என்று சொன்னால், அசாதாரண விஷுவல் அனுபவம் தந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பட்ஜெட் 4,500 கோடி ரூபாய்எனலாம். அதேபோல், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் மொத்த வசூல் 186 கோடி ரூபாய் என்று சொன்னால், ‘புஷ்பா 2’ படத்தின் முதல் நாள் வசூல் 1,860 கோடி ரூபாயாக இருந்திருகக் வேண்டும்.
ஆக, நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். ஓர் உண்மைக்கு அடிப்படையே மிகுந்த நம்பகத்தன்மைதான். அந்த வகையில், ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் சொல்லும் பொய்க்கு கூட கூடுதலாக நம்பகத்தன்மை தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.