சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் இந்தி நடிகர் மகேஷ் மஞ்ரேகர்

மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கைக் கதை யாத்ரா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளியானது. இதில் ராஜசேகர ரெட்டியாக மம்மூட்டி நடித்திருந்தார். படத்தை மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இப்போது இதன் இரண்டாம் பாகம் யாத்ரா 2 என்ற பெயரில் உருவாகிறது. இதில் ஆந்திர முதல்வரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதைச் சொல்லப்படுகிறது. ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்கிறார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவாக இந்தி நடிகர் மகேஷ் மஞ்சரேக்கர் நடிக்கிறார். இவர் தமிழில், ஆரம்பம், வேலைக்காரன் படங்களில் நடித்துள்ளார்.அவர் தொடர்பான காட்சிகள் இப்போது படமாகி வருகின்றன. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். 2024ஆம் வருடம் பிப்ரவரி மாதம் படம் வெளியாகிறது