தமிழ் சினிமாவில் தனது தனித்துவமானஇசை மூலம் இளம் ரசிகர்களை நடிகர்களுக்கு இணையாக பாடல்களின் வெற்றி, தோல்வியை கடந்து இருபத்து ஐந்து ஆண்டுகளாக தக்க வைத்திருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைக் கச்சேரி ஒன்றினை வரும் சூலை 27ஆம் தேதி நடைத்தவுள்ளார்.
இதற்கு யுவன் லாங் ட்ரைவ்
என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரி தொடர்பாக பல தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தயக்கமின்றி பதில்கூறினார்.
” நடைபெறவுள்ள இசைக் கச்சேரியில்36 பாடல்களை நாங்கள் பாடவுள்ளோம். அதில் பெரும்பாலும் எனது குரலில்தான் பாடல்கள் இருக்கும். வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகள் நடத்தப்படுவதைப் போல ரசிகர்கள் மேடைக்கு அருகில் மேடையைச் சுற்றி 360 டிகிரி கோணத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
வாய்ப்பிருந்தால் ரசிகர்களுக்கு மத்தியில் சென்று நான் நடனமாடவும் செய்வேன். இந்த இசைக் கச்சேரியில் பவதாரணி குரலில் பாடல் ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இசைக்கப்படும். கோட் படத்தில் பவதாரிணி பாடலைப் பாடட்டும் என நானும் வெங்கட் பிரபுவும் முடிவு செய்து வைத்திருந்தோம். அப்போது பவதாரிணி மருத்துவமனையில் இருந்தார். அதன் பின்னர் எல்லாம் வேறுமாதிரி ஆகிவிட்டது. ஏ.ஆர். ரஹ்மான் லால் சலாம் படத்தில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாடல்கள் உருவாக்கி இருந்தார். அதன்பின்னர் அது தொடர்பாக விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஏ.ஐ தொழில்நுட்பஉரிமம் பெற்று நாங்களும் அவ்வாறு செய்தோம்.
1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்து இப்போதுவரை வெளியான படங்களில் இடம்பெற்ற, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களைத்தான் இசைக் கச்சேரியில் பாடப்போகின்றோம். இசைக் கச்சேரிக்கு நடிகர் சிலம்பரசனை அழைக்க போகின்றேன்.அவர் வந்தால் மகிழ்ச்சிதான்.

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு
முயற்சி செய்கின்றேன். அவர் வந்தால் பாடிவிடலாம் என கூறியவரிடம்
இளையராஜா எம்.பி., ஆன பின்னர் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றதே அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு ….
விமர்சனங்களை நான் விமர்சனங்களாகத்தான் பார்க்கின்றேன். என்னை எதுவும் தொந்தரவு செய்யாது. விமர்சனங்கள் எனக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது. என்னைச் சுற்றி எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கின்றார்கள். எனவே விமர்சனங்கள் எனக்கு எந்தவகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது
என்றார்.
அதேபோல் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக கேட்கப்பட்ட போது
மங்காத்தாபடத்தினை யார் தயாரிக்கின்றார்கள். யார் இயக்குகின்றர்கள்? அப்படி ஒன்று நடந்தால் அந்த குழு என்னை அணுகவேண்டும், அப்படி அணுகினால் சிறப்பா செஞ்சுடலாம் என கூறினார்.