சென்னை மத்தியச் சிறையில் 1999-ம் ஆண்டு நடந்த கலவரம், அதனை அன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. கருணாநிதி தலைமையிலான அரசாங்கம் கையாண்ட விதம் அதன் தாக்கத்தில் எழுதப்பட்டு திரைப்படங்கள் பல தமிழில் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான கதை, சிறைக்குள்தான் நடக்கிறது என்றாலும் எந்த சிக்கலும் இன்றி தெளிவாகவும் சிறப்பான திரையாக்கத்துடனும் சொல்லப்பட்டிருக்கிறது.
அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் தங்கள் சுயநலனுக்காக சிறைக் கைதிகளை எப்படிப் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிகிறார்கள் என்கிற சிறை அரசியலையும் அவர்களின் ஆட்டத்தில் அப்பாவிகளின் குரல் தொடர்ந்து நசுக்கப்படுவதையும் கதைக்குள் கதையாகப் பேசுகிறது சொர்க்க வாசல் படம்.
காட்டும் குக்கர் பஷிர் (பாலாஜி சக்திவேல்), அங்கும் போதைக்கு அடிமையாகி ரோஜாவைத் தேடும் மோகன் (ரவி ராகவேந்திரா), கைதிகளின் குறிப்பறிந்து நடக்கும் ஜெயிலர் கட்டபொம்மன் (கருணாஸ்), எப்போதும் முறைப்பும் விரைப்புமாக அலையும் ரவுடி டைகர் மணி (ஹக்கீம் ஷா), ‘இங்க நாம போலீஸா, அவங்க போலீஸா?’ என்று கேட்கும் ஜெயில்அதிகாரி ஷராஃபுதீன், பார்த்திபனின் நண்பராக ரங்கு (மவுரிஷ்) உட்பட கதாபாத்திர வடிவமைப்பில் காட்டியிருக்கும் தனித்துவம், மெனக்கெடல்ரசிக்க வைக்கிறது. கரி கோடுகளால்
இதுவரை பார்த்திராத, பார்த்திபன் என்ற பாத்திரத்தில் ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு, அற்புதம். சிறை அனலுக்குள் அவர், டைகர் மணியுடன் மோதி ரத்தத்துடன் விழுவதில் தொடங்கி, அதிகாரியிடம், “நீங்க விசாரிச்சு என்ன சார் நடந்துட போகுது?” என்று கேட்பது வரை, இது வேறு பாலாஜி. செல்வராகவன், சிகா என்ற ரவுடி கேரக்டருக்கு அப்படியே பொருந்தி இருக்கிறார். அலட்டல் இல்லாத கருணாஸ் நடிப்பில், யதார்த்தம். சானியா ஐயப்பனுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கொடுத்ததை நிறைவாக செய்திருக்கிறார்.
‘வன்முறைதான் மிகப்பெரிய கோழைத்தனம்’,