ஜப்பான் அறிமுக டீசரில் தகதகக்கும் தங்கமாக கார்த்தி

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் கதாபாத்திர அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.கார்த்தியின் பிறந்த நாளான இன்று ‘ஜப்பான்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் தனது கதாபாத்திரப் பெயரை ஜப்பான் என்று சொல்கிறார். இந்த டீசரில் தங்கப் பற்கள், வித்தியாசமான உடை, தங்க துப்பாக்கி, தங்க சட்டை என முழுக்க தகதகவென ஜொலிக்கிறார் கார்த்தி.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.