பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான படம் `LIK’. இந்தப் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வு சென்னையில்நடைபெற்றது. அதில் பேசிய விக்னேஷ் சிவன்,
“இந்தப் படம் வெளியானதே எனக்கு பெரிய ப்ளாக்பஸ்டர்தான். எப்போதுமே கனவுகள் பெரிதாக இருந்தால் சிக்கல்தான். நமக்குச் சுலபமாகக் கிடைப்பதை வைத்துச் செய்தால் எளிமையாக நடக்கும் என்பதால் நம் மனமே அப்படியான விஷயங்களைத்தான் தேடும்.
நான் ஒரு கம்ஃபர்ட் ஸோனில் இருக்கிறேன். அதற்குள் வரக்கூடிய படங்களை எத்தனை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அதிலிருந்து வெளியேறி,
மிக சவாலான ஒரு படத்தைச் செய்ய விரும்பினேன்.
படத்தை நிறைய பேர் பாராட்டினாலும், சில விமர்சனங்களும் இருக்கிறது. எப்போதும் புதிதாக ஒரு விஷயம் சொல்வதென்றால் அதை எல்லோருக்கும் புரியும்படி கொடுக்க வேண்டும். அப்படி இருக்கையில்,
சில இடங்கள் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை என்னை மேம்படுத்தும் விமர்சனமாக எடுத்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தை நான் எடுக்க முதல் காரணம் பிரதீப். அவர் இல்லை என்றால் இந்தப் படம் நடந்திருக்காது. இந்தப் படத்திற்கு பட்ஜெட்தான் பெரிய பிரச்னை. இன்று பல படங்கள் டிராப் ஆகிறது, இயக்குநர்கள் மாற்றப்படுகிறார்கள். இன்று இயக்குநர்களின் சூழல் மிகவும் கடினமானதாக இருக்கிறது. நினைத்ததை நினைத்தபடி கொண்டு சேர்க்கமுடியாமல் போனால் அது பெரிய வலி. ஆனால் முடிந்தவரை நான் நினைத்த படத்தை நினைத்தபடி எடுத்துவிட்டேன். அதற்கு பிரதீப் மிகவும் உறுதுணையாக இருந்தார். குறிப்பாக, அந்த நீச்சல் குளக் காட்சி எல்லாம் மிக சிரமப்பட்டு நடித்தார். ஆனால் அதை வெளிக்காட்டியதே இல்லை.படத்துக்கு கிடைத்த ஓப்பனிங்கும் அவரால் வந்ததுதான். இந்தப் படமும் உங்களுக்கு ரூ.100 கோடி படமாக மாறும்.
சிம்பிளா செய்தால் ’ஒரே மாதிரி செய்கிறேன்’ என்கிறீர்கள். புதுசா செய்தால், அதில் குறை சொல்கிறீர்கள். நான் கேசரி செய்தால் மட்டும், ’ஏன் காரமாக இல்லை’ என்கிறீர்கள். என் சிக்கன் குழம்பு மட்டும் ’ஏன் இனிப்பாக இல்லை’ என்கிறீர்கள். இந்தப் படத்துக்குள் சில விஷயங்கள் இருக்கின்றன. அதுதான் எனக்கு வரும். எனக்கு பயங்கரமான படம் எல்லாம் வராது. அதை ஜாலியா பார்த்து ரசியுங்கள்” என்றார்.