லிஜோமோல்ஜோஸின் அழகைப் பார்த்து மகிழும் ஆண்கள் இப்படத்தில் அவர் செய்யும் செயலைப் பார்த்து பயந்து போவார்கள் என்பது நிச்சயம்.
ஒரு ஆண் நல்லவன் என்பதற்கு அடையாளம் கடவுள் பக்தி நெற்றியில் பட்டை போடுவது என்று காட்டியிருக்கிறார்கள்.ஆனால் அது ஒரு முகமூடி என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இந்த வேடத்தை சரியாகவே செய்திருக்கிறார் ஹரிகிருஷ்ணன்.
காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜீவ்காந்தி சிரிக்க வைக்கிறார்.சண்டைப்பயிற்சி இயக்குநர் சுதேஷ் காவலதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.தாரணி, வைரபாலன் ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையில் கதைக்களத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
சா.காத்தவராயன் ஒளிப்பதிவில் கான்கிரீட் காடுகளும் அதில் வசிக்கும் இறுகிய மனிதர்களையும் உள்ளது உள்ளபடி காட்டியிருக்கிறார்.
இளையராஜா சேகரின் படத்தொகுப்பில் படம் இயல்பாக நடக்கிறது.
இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன், கதாநாயகர்கள்தான், வீரமிக்கவர்களாக, கெட்ட்வர்களாக நடிப்பார்களா? நான் கதாநாயகிகளும் அதற்கு பொருத்தமானவர்களே என்று காட்டியிருக்கிறார்.அதைச் சமன் செய்ய லாஸ்லியா கதாபாத்திரத்தையும் படைத்திருக்கிறார்.