சினிமா தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை தமிழ் சினிமாவில் அம்மா ஜென்டிமென்ட் தவிர்க்க முடியாத ஒன்றாகி போனது.
அதனையே வெவ்வேறு கதை களமாக்கிநான்கு கதைகள் மூலம் பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில்.
ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜாவடிவுக்கரசி,கனிகா,ஆதி
மகன்களின் அம்மா மீதான பாசத்தை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தும் வேடங்களில் நடித்திருக்கும் ரியோ ராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர்.தாய்க்காக கொலை செய்யத் துணியும் மகன், பாலியல் தொழிலாளியின் மகனின் ஏக்கம்,கிடைத்த தாய்க்காக காதலியைத் தூக்கி எறியும் மகன் என ஏற்றுக் கொண்ட வேடங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
பாரதிராஜா,வடிவுக்கரசி,ஆதிரா,து
யோகி பாபு,லவ்லின் சந்திரசேகர்,கனிகா, ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என படத்தில் ஏராளமான நடிகர்கள்.
எல்லோரையும் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மல்லிகா அர்ஜுனன், மணிகண்ட ராஜு ஆகிய இருவரின் ஒளிப்பதிவு வெவ்வேறு விதமான கதைக்களங்களை
அவற்றிற்கேற்ப படமாக்கியிருக்கிறார்கள்.
தேவ் பிரகாஷ் ரீகன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.பின்னணி இசையிலும் சோகம் பொங்கி வழிந்தோடுகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் பிரிட்டோ ஜே.பி. அம்மா பாசத்தின் வகைகளை அடுக்கியிருக்கிறார்.அம்மாவுடன் சண்டை போட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகரிடம் யோகிபாபு சொல்லும் கதைகளாக இந்தப்படம் விரிகிறது.யோகிபாபு சொல்லும் கதைக்குள் பல சொல்லும் கதைகள்.மும்பை தாதாக்கள் மோதல், பாலியல் விடுதி,முதியோர் இல்லம், ராமேஸ்வர மீனவ மக்கள் வாழ்நிலை எனப் பல்வேறு இடங்களுக்குப் பயணித்திருக்கிறது திரைக்கதை.
அங்கங்கே நம்பிக்கையூட்டும் விதமாக இருந்தாலும், தன்னம்பிக்கை இல்லாத அவநம்பிக்கையே பெரும்பான்மை இடம் பிடித்திருப்பதைப் பார்க்கும் போது ரசிக்க மனம் தயங்குகிறது.