டிக்கட் முன்பதிவில் சாதனை நிகழ்த்திய’ எம்புரான்’

மோகன்லால் நடிப்பில் வெளியாக இருக்கும் எம்புரான் படம் வெளியாவதற்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவில் விஜய்யின் லியோ பட டிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது.

மலையாளத் திரையுலகத்தில் இதுவரை வெளிவந்த படங்களின் வசூல் சாதனையை ‘எல் 2 எம்புரான்’ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இப்படம் மார்ச் 27 ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
படத்திற்கான முன்பதிவு(21.03.2025) நேற்று தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே ஒரு ஆன்லைன் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியத் திரைப்படங்களில்ஒரு மணி நேர முன்பதிவில் ‘லியோ’ தமிழ்படம் 82 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அதை தற்போது ‘எல் 2 எம்புரான்’ படம் முறியடித்துள்ளது.

கேரளாவில் மட்டுமே 5 கோடிக்கும் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது.
 இந்த படத்தில் டோவினோ தாமஸ் ‘ஜதின் ராமதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் ‘சையத் மசூத்’ என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  கேம் ஆப் த்ரோன்ஸ் மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் பிளின் இப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது.
ஐமேக்ஸ்-ல் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் இது. முன்பதிவில் சாதனை படைத்து வருவதால், படத்தின் மீதானஎதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.