சேரநாட்டு யானைதந்தம்’ இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை முத்து நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சேரநாட்டு யானைதந்தம்’. எதார்த்தமான கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ராஜசிம்மன், பாண்டி அக்கா, விஜயன் தியாகராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஏ.சி.குமரேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
வையாபுரி குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, அஸ்வசக்தி முத்து பழனிசாமி, லத்திகா புரொடக்‌ஷன்ஸ் சசி, ஏ.கே.கோவிந்தராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 21 ஆம் தேதி, சென்னை பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ஓ விஜயமுரளி, விநியோகஸ்தர் ஜின்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் விஜயன் தியாகராஜன் பேசுகையில்,
“இவ்ளோ பேரு வந்து எங்களை ஊக்குவிப்பது ரொம்ப சந்தோஷம், ரொம்ப நன்றி. இந்த நிகழ்ச்சி வந்து எப்படி சிறப்பாக சிறப்பித்தது போல், எங்கள் படத்தையும் திரையரங்கிற்கு சென்று பார்த்து ஓட வைக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்”என்றார்.
’சிந்துநதி பூ’ புகழ் இயக்குநர் செந்தமிழன் பேசுகையில்,
“சிறப்பு விருந்தினர்களுக்கும் விழாவினை சிறப்பிக்க வருகை தந்துள்ள இயக்குநர் தயாரிப்பாளர்களின் நட்பு மற்றும் சொந்தங்களுக்கும் ’சேரநாட்டின் யானை தந்தம்’ படத்தில் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ள கலைஞர்களுக்கும் பத்திரிக்கை தொலைக்காட்சி இணையதள ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பூலோகம் ரவி என்ற பெயர் எப்படி வந்தது, என்பதை நான் சொல்ல வேண்டும், என்று நினைத்தேன். ஆனால், தொகுப்பாளர் நண்பர் அதை சொல்லிவிட்டார்.  இதற்கு பூலோகம் ரவி தான் இதுக்கு விளக்கம் சொல்லியிருக்கணும் அது எங்களுக்கு கொஞ்சம் கெளரமா இருக்கும், இவர் முன்னாடி சொல்லிட்டாரு அப்புறம் ரவியை மறந்து விடக்கூடாது என்று என்ன நடந்தது என்று நான் சொல்றேன். ’சிந்துநதிப் பூ’ ’சேரன் சோழன் பாண்டியன்’ படங்களுக்கு பிறகு கொடுமுடி மனோகர் என்ற ஒரு துணை இயக்குநர் மூலம் ரவி எனக்கு அறிமுகமானார்.  அப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நண்பரின் படத்தில் பணியாற்றினோம். அந்த படத்தின் போது தான், ரவியிடம் நீங்க என்ன பெயர் வச்சிக்க போறீங்க, என்று கேட்டேன். ரவி என்ற பெயரில் ஏகப்பட்ட பேர் இருக்காங்க, அதனால் அடையாளமாக பெயருக்கு முன்னாடி எதாவது சேர்த்துக்குங்க, என்று சொன்னேன். அப்போது எதை சேர்க்கலாம் என்ற யோசனை வந்த போது, ரவி அவங்க அம்மா பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார், உடனே உங்க அம்மா பெயரான பூலோகத்தை சேர்த்துக்கலாமே, என்று சொன்னேன். அப்படி தான் ரவி பூலோகம் ரவியாக மாறினார்.
பூலோகம் ரவி பாக்யராஜ் சாரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். அவரைப் பற்றி ரொம்பவே சிலாகித்து பேசுவார். அவர் படத்தில் வரும் காட்சி, வசனங்கள் அனைத்தும் ரவிக்கு அத்துப்படி.  பாக்யராஜ் சார் ஒரு திரைக்கதை மன்னன், இந்திய அளவில் பாராட்டப்பட்டவர், அவர் ஒரு லெஜண்ட்.  எனவே, இந்த ‘சேரநாட்டு யானை தந்தம்’ படத்தின் திரைக்கதை அவரோட மானசீக குருவின் பாணியில் பூலோகம் ரவி மிக சிறப்பாக பண்ணியிருப்பார் என்று நான் நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன். படம் தயாரான பிறகு என்னை பார்க்க சொல்லி அழைத்தார், இரண்டு முறை வாய்ப்பு வந்தும் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது.  சீக்கிரமே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ‘பாரதி கண்ணம்மா’ படம் வெளியான போது, அந்த படத்தை பார்த்த கே.எஸ்.ரவிக்குமார் சார், ”சேரன் நம்ம கூட்டத்தில் இருந்தவனா, நம்ம ஆளாடா இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறான்” என்று சொன்னாராம். அதே பீலிங் தான் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது எனக்கு ஏற்படுகிறது. எங்களுடன் பயணித்த மற்ற நண்பர்களுக்கும் இதெ பீலிங் தான் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு படத்தை மிக சிறப்பாக பண்ணியிருக்காங்க.
இசையமைப்பாளர் குமரேசன் அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பினாலும், எப்பா இது…என்ற உணர்வு ஏற்படாமல், பாடல்களுடன் பயணித்த அனுபவம் ஏற்பட்டது. பாடல்கள் அனைத்தும் சுகமான அனுபவத்தை கொடுத்தது. படத்தின் டிரைலர் நல்லா இருக்கும். படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது. நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனோட ‘சிந்துநதி பூ’ படத்தின் போது இப்போதுள்ள இணையதளம் மற்றும் சோசியல் மீடியா வசதிகள் இருந்திருந்தால் பாடல்கள் எந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன். ஆனால், எனக்கு இப்போதும் ஒரு அடையாளமாக இருப்பது அந்த படமும், பாடல்களும் தான். அந்த பாடல்கள் வாங்கியது ஒரு பெரிய கதை. பாடல்கள் குறித்த நேரத்தில் வரவில்லை என்று நான் கோபமடைந்து வைரமுத்து சாரின் உதவியாளரிடம், உங்க பாடலாசிரியர் அறிமுக இயக்குநருக்கு உடனே பாடல் கொடுக்க மாட்டாரா, நிங்க மெட்டு ஆடியோ மற்றூம் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுங்க, என்று சொல்லி விட்டேன். அதன் பிறகு வைரமுத்து சாருக்கு விசயம் போய், அவர் என்னை அழைத்தார். அப்போது எனக்கு பேச்சே வரவில்லை, அப்போது தான் அவர் சொன்னார், நல்ல மெட்டு இருக்கு இதற்கு சாதாரணமான வார்த்தைகளை போட்டு விட முடியுமா, புதிய வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன். சிறப்பாக செய்ய வேண்டும் அல்லவா, என்று சொன்னார். அதேபோல், அந்த படத்திற்கு அவர் சிறப்பான பாடல் வரிகளை கொடுத்தார். அதுபோல் பூலோகம் ரவியும் அவருடைய படத்திற்கு மிக அருமையான பாடல்களை கொண்டு வந்திருக்கிறார்.  மீண்டும் இந்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன், ரவி நீங்க நிறைய படங்கள் இயக்கி பிஸியான இயக்குநராக வருவீர்கள், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.