தக் லைஃப் – திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் பல்வேறு காலகட்டங்களில் அன்றைய முன்னணி நடிகர்களால் நடிக்கப்பட்ட திரைக்கதையின் நவீன வடிவமே” தக்லை ஃப் “திரைப்படம். படம் முடிகிறபோது இதற்கு ஏன் இம்புட்டு பில்டப் என்கிற மனநிலையுடன் தியேட்டரை விட்டுபார்வையாளர்கள் வெளியேறுகின்றனர். ஒரே ஆறுதல் சிலம்பரசனின் தீப்பிடிக்கும் நடிப்பு மட்டுமே. அப்படி என்னதான்

தக்லை ஃப் திரைக்கதை….

 தாதாவாக இருக்கும் கமல்ஹாசன்.அவருக்கும் காவல்துறைக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் கமல்ஹாசன் தரப்பு சுட்டதில்தவறுதலாக ஒருவர் இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிலம்பரசன். அவரை எடுத்து வளர்க்கிறார் கமல்ஹாசன்.சிலம்பரசன் வளர்ந்து அப்பாவைப் போலவே தாதாவாகிறார்.இருவருக்குள்ளும் முரண்பாடு வருகிறது.கமல்ஹாசனை கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் கமல்ஹாசன் தப்பித்தாரா? சிலம்பரசன் என்ன செய்தார்? இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் தக்லைஃப் திரைப்படம்.
தொழில்நுட்பம் மூலம் இளம் வயதுத் தோற்றம், அதன்பின் இப்போதைய தோற்றம் அவற்றிற்கடுத்து தற்காப்புக்கலைஞர் தோற்றம் என வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார் கமல்ஹாசன்.மனைவி அபிராமி, ஆசை நாயகித்ரிஷா என அகவாழ்க்கையும் இருக்கிறது.
எல்லாவற்றிலும் கமல்ஹாசன் தன்னுடைய அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கமல்ஹாசன் வளர்ப்பு மகனாக நடித்திருக்கும் சிலம்பரசன்,துள்ளலும் துடிப்புமாக நெருப்பு போல் இருக்கிறார். கமல்ஹாசனை விஞ்சுமளவுக்கு நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் மனைவியாக நடித்திருக்கும் அபிராமியின் பாத்திரப்படைப்பும் அதில் அவர் நடிப்பும் வரவேற்பையும் பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொடுக்கிறது.

த்ரிஷாவின் கதாபாத்திரம் இளைஞர்களுக்காக வலிந்து உருவாக்கப்பட்டது போன்றே தெரிகிறது. அதுவே படத்திற்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கிறது.

கமலின் அண்ணனாக நடித்திருக்கும் நாசர்,மகேஷ்மஞ்ச்ரேகர், ஜோஜுஜார்ஜ்,அசோக்செல்வன்,

ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலமானவர்கள் நடித்திருக்கிறார்கள்.அதனால் எந்த பயனும் இல்லை.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் படத்தைப் பாதுகாத்து நிற்கின்றன.வழக்கம்போல் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தாமல் கோபமூட்டுகிறார்கள். பின்னணி இசையில் தன் இருப்பைக் காட்டியிருக்கிறார்.

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் நல்லனுபவம் தரக்கூடியவையாக அமைந்திருக்கின்றன.நவீன தொழில்நுட்ப உதவியால் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் நன்று.

கமல்ஹாசன் இளவயது சிலம்பரசன் சிறுவயதில் படம் தொடங்குகிறது.அஞ்சுவண்ண பூவே பாடல் இதமாக இருக்கிறது. அதனால் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சொல்லும் என எதிர்பார்த்தால் ஆனால் அம்மாதிரி நடக்காமல் நேரெதிர்த் திசையில் பயணிக்கிறது.

கமல்ஹாசன் இல்வாழ்க்கை தொடர்பான காட்சிகள் சர்ச்சைக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

உணர்வுப்பூர்வமான கதைசொல்ல முயன்றிருக்கிறார்கள். மணிரத்னம் கமல்ஹாசன் ஆனால் முழுமையடையவில்லை.