தமிழ் பேச தயாராகும் மலையான’இத்திகர கொம்பன்’

திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்.
அந்த வகையில் மலையாளத்தில் தயாரான’இத்திக்கர கொம்பன்’ என்கிற மலையாளப்படம்தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது.
 இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா  வடகரா தயாரித்துள்ளனர்
 மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீனா குறுப்பு, கேசு , சுமேஷ், ஸ்ரீஜா போன்ற நடிப்புக் கலைஞர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
 படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கே. ராஜு. இவர் பிரபல இயக்குநர் கிருஷ்ணசுவாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
 இப்படத்திற்கு பினீஷ் பாலகிருஷ்ணன் – சீனு வயநாடு ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள்.
வீ.கே . பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சாபு இரன்மல கலை இயக்கத்தையும், ஜான்சன் தாமஸ் படத்தொகுப்பையும்  கவனித்துள்ளனர்.சண்டைக் காட்சிகளை ஆக்சன் அஷ்ரப் குருக்கள் அமைத்துள்ளார்.