தி கோட் வசூல் -அதிர்ச்சியில் விஜய் – விநியோகஸ்தர்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.

இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர்  நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஏஜிஎஸ்நிறுவனம்தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி  வெளியானது.இப்படம்தமிழகத்திலமட்டும் சுமார் தொள்ளாயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கி வெளியிட்டுள்ளார்
இந்நிலையில், இப்படத்தின் முதல்நாள் உத்தேச வசூல்
நிலவரம் வெளிவந்துள்ளது.
அதன்படி முதல்நாள் வசூல் சுமார் இருபத்து இரண்டுகோடி என்று சொல்லப்படுகிறது.இது விஜய்யின் முந்தைய பட வசூல்களை விடக் குறைவு என கூறப்படுகிறது.

இதுகுறித்து திரைப்பட வட்டாரத்தினர் கூறியதாவது….

இந்த வசூல் விஜய்யின் முந்தைய படங்களை விட மிகவும் குறைவு.
இப்படத்துக்கு முன்பு வெளியான லியோ படம் முதல்நாளில் சுமார் முப்பத்து நான்கு கோடி வசூலித்தது.விஜய் நடிப்பில் வெளியான தோல்விப்படம் என்று சொல்லப்பட்ட பீஸ்ட மற்றும் சர்கார் ஆகிய படங்களின் முதல்நாள் வசூல் தி கோட் படத்தை விட அதிகம்.பீஸ்ட் படம் முதல்நாளில் சுமார் முப்பத்து இரண்டு கோடி வசூல் செய்தது. சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் சுமார் இருபத்து ஒன்பது கோடி. அந்த படங்களின்
வசூலை காட்டிலும் தி கோட் படத்தின் வசூல் குறைவாக இருக்கிறது. சர்வதேச அளவில் திரைப்படங்களின் வசூல் தகவல்களை வெளியிட்டு வரும் பல்வேறு இணைய தளங்களும் திகோட் படத்தின்முதல் நாள் சர்வதேச மொத்த வசூல் 87 கோடி முதல் 100 கோடி ரூபாய்க்கு குறைவு என செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த நிலையில் ஏஜி.எஸ் நிறுவனம் தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் 128 கோடி ரூபாய் என அறிவித்திருக்கிறது.

தி கோட்படம் சரியாக இல்லை என்றும் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த ராஜதுரை என்கிற படத்தின் காப்பி என்றும் வருகிற விமர்சனங்களால் வசூல் நிறைவாக இருக்காது என்றும் திரையரங்கினர் சொல்லி வருகிறார்கள்.இந்தக் கருத்து சரியா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் என்கின்றனர்.
இந்தத் தகவல்களால் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோக நிறுவனம் ஆகியன மட்டுமின்றி நடிகர் விஜய் தரப்பும் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
TAGS:AGS Entertainment Romeo Pictures The GOAT The Greatest of all time Venkat Prabhu Vijay