பகீர் கிளப்பிய” பகீரா”

0
260

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு ‘பகீரா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

காதலர் தினத்தை தமிழ் சினிமாவேகொண்டாடிக்
கொண்டிருக்க, திடீரென இப்படி ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்து, அதில் ‘நோ மோர் வேலண்டைன்ஸ் டே’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பகீரா என்ற பெயர் ஏற்கனவே தமிழக இளைஞர்களிடையே பரிச்சயமான பெயர். ஜங்கிள் புக் காமிக்ஸாக, அனிமேஷன் படமாக, கார்ட்டூன் திரைப்படமாக, சமீபத்தில் லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக என பல விதங்களில் ஜங்கிள் புக் கதையைப் பார்த்திருக்கின்றனர்.

அதில் மிகவும் பிடித்த கேரக்டர் என்றால் அது பகீராவாகத்தான் இருக்கும். கருஞ்சிறுத்தையாக வரும் பகீரா, மோக்லியை காப்பாற்றுவது மட்டுமே கடமையாக எந்நேரமும் கண்ணும் கருத்துமாக இருக்கும். “சிறந்த நண்பனாகவும், காப்பானாகவும் இருந்த பகீராவை கொஞ்சம் நெகடிவாக பார்த்தால் எப்படியிருக்கும்” என்பது தான், தன்னுடைய பகீரா கதை என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். கதையில் மட்டும் எசகு பிசகாக யோசிக்கவில்லை. பிரபுதேவாவின் கேரக்டரிலும் கொஞ்சம் வில்லத்தனமாகவே ஹேண்டில் செய்திருக்கிறார்.

பல ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பின்னணியில் ‘மூன்று கண்கள்’ உடைய கண்ணாடியை அணிந்துகொண்டு நிற்கிறார் பிரபுதேவா. ஒவ்வொரு கண்ணாடி வட்டத்திலும் ஜங்கிள் புக் திரைப்படத்தின் காட்சியும், 11:11 என்ற நேரமும், ஒரு காரினுடைய படமும் இடம்பெற்றிருக்கிறது. மொட்டை அடித்துக்கொண்டு இரத்தம் ஒழுக முரட்டுத்தனமான வில்லனாக தோற்றமளித்திருக்கிறார் பிரபுதேவா.

தமிழ் சினிமா எத்தனையோ புது வகையான சினிமாக்களை சமீப காலமாகக் கண்டுவருகிறது. வசனமே இல்லாத படம் முதல், ஒரே ஒரு நடிகர் நடித்த பார்த்திபனின் ஒத்த செருப்பு எண் 7 வரை புதிய முயற்சிகள் தான். ஆனால், A சர்டிஃபிகேட் வாங்கிக்கொண்டு மிகக் கொடூரமான காட்சிகளை வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் ஹாலிவுட் அளவுக்கு தமிழில் வந்ததில்லை.

காரணம் இந்தப்படங்களை தியேட்டர்களில் மட்டுமே ஒளிபரப்பமுடியும். வீடுகளில் ஒளிபரப்பாகும் கேபிள் அல்லது டிஷ் சேனல்களில் கொடூரமான இந்தப் படங்களை திரையிட முடியாது என்பதால் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலைக்கு விற்கமுடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள் அதிகம் வந்துவிட்டதால், இந்தத் தடையையும் உடைத்து தமிழ் சினிமா வெளியேவந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனை, ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற இயக்குநர்கள் எடுத்தால் கண்டிப்பாக பெரிய விஷயமாக இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here