பாரத பிரதமர் மோடி பாராட்டிய படத்திற்கு வரிவிலக்கு

ஆதித்யா ஜம்பாலே இயக்கியுள்ள இதில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் 23-ம் தேதி வெளியானது இந்தப் படம். அதற்கு முன் 

ஜம்மு-காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் உண்மையான தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆர்டிகிள் 370 திரைப்படம்
உதவும்” என்று கூறியிருந்தார்.
ஆதித்யா ஜம்பாலே இயக்கியுள்ள இதில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியானது.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்தும் தீவிரவாதம் குறித்தும் பேசும் இந்தப்படத்துக்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு மத்தியபிரதேச அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் கூறும்போது, “ஜம்மு காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட மாற்றங்களை நெருக்கமாக அறிய இந்தப் படம் உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.