‘புறநானூறு’ , ‘ஜெயம்ரவி 34 ‘ படப்பிடிப்புகள் தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ ஜெயம் ரவி நடிக்கும் ஜெயம்ரவி – 34 ஆகிய இருபடங்களின் தொடக்க விழா சென்னையில் நேற்று(14.12.2024) நடைபெற்றது.

புறநானூறு:
‘அமரன்’ படத்தின்  வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இருவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில் சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று (டிசம்பர்14) முதல் சென்னையில் தொடங்கி இருக்கிறது.இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கின்றார்.முன்னதாக சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘புறநானூறு’. இதன் முதற்கட்ட பணிகளின் போது சுதா கொங்காரா – சூர்யா இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம்ரவி: 34
ஜெயம் ரவி நடிக்கும் 34-வது படத்தின் பணிகள் பூஜையுடன் டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கின.
‘பிரதர்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில், ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜெனி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்தப் படங்களையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். ஜெயம் ரவியின் 34-வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார்.‘பிரதர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைகிறார் ஜெயம் ரவி. தவ்தி ஜிவால் நாயகியாக நடிக்கிறார். பி.வாசுவின் மகன் சக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.