புஷ்பா – 2 புதிய போஸ்டர் வெளியானது

 

புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமாக . ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியானது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம்தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில்  தாமதம் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.பின்னர், ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக  அறிவித்தனர். அதன்படி, இப்படம் வெளியாக இன்னும் சரியாக 100 நாட்கள் உள்ளன. இதனையடுத்து, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், ‘இன்னும் 100 நாட்கள்’ என்று பதிவிட்டும் உள்ளனர்.