மோகன்லாலை விமர்சித்த யுடியுபர் கைது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூன்று கிராமங்கள் அழிந்ததுடன் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர்.  பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு பணியிலும் நிவாரணப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். அந்த சமயத்தில் இந்திய ராணுவத்தின் கவுரவமான லெப்டினென்ட் கர்னல் பொறுப்பு வகிக்கும் மோகன்லால் ராணுவ சீருடையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.மேலும் தனது அறக்கட்டளை மூலமாக  மூன்று கோடி ரூபாய்அளவிலான நிவாரண உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த யு-டியூப் சேனல் நடத்தி வரும் அஜு அலெக்ஸ் என்பவர் மோகன்லால் இப்படி ராணுவ சீருடை அணிந்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து நிலச்சரிவு பாதித்த இடங்களை பார்வையிட்டது குறித்து கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் நடிகர் சித்திக் போலீசில் அளித்த புகாரின் பேரில் அஜு அலெக்ஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.