ராஜராஜ சோழன் இந்து இல்லை- கமலஹாசன்

லைக்கா புராடக்க்ஷன் தயாரிப்பில் செப்டம்பர் 30 அன்று வெளியான” பொன்னியின் செல்வன்” திரைப்படம் தமிழ்நாடு, மற்றும் 

அமெரிக்கா, வளைகுடாநாடுகள், இங்கிலாந்து, மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா என தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் இப்படத்தின் வசூல் இதற்கு முன்பு வெளியான தமிழ் சினிமா முன்னணி கதாநாயகர்கள் நடிகர்களின் படங்களின் வசூல் சாதனைகளை பின்னுக்கு தள்ளி முன்னேறி வருகிறது கதாநாயகர்களின் பிம்பத்தை முன் நிறுத்தி வசூல் வேட்டையை நிகழ்த்திவந்த தமிழ் திரையுலகில் நாவலை முன்னிலைப்படுத்தி வெளியான” பொன்னியின் செல்வன்” குறுகிய நாட்களில் தமிழ்நாடு, மற்றும் வெளிநாட்டில் 100 கோடி ரூபாய் மொத்தவசூலை கடந்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான” விக்ரம்” படத்தின் வசூல் சாதனையை அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாது என எல்லோரும் கூறிக் கொண்டிருந்த நிலையில் அப்படத்தின் வசூல் சாதனையை மூன்று மாதங்களில் பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது இந்த நிலையில்

நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து “பொன்னியின் செல்வன்” படம் பார்த்தார் அதன் பின்னர்

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி நீட்டிக்க வேண்டும். விக்ரம் பட சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது என்பது சந்தோசம் தான். அதைக் கொண்டாட தான் நான் இங்கு வந்துள்ளேன். ஆரோக்கியமான போட்டி இருப்பதில் தவறில்லை” என்றார்இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை என்று கூறிய கருத்து குறித்து கேட்டபோது

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம், வைணவம், சமணம் என்றே இருந்தது.என்று தெரிவித்தார்