ருத்திரன் – திரைவிமர்சனம்

அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோருடன் அமைதியாக வாழ்ந்து வரும் ராகவா லாரன்ஸுக்கு எதிர்பாராத சிக்கல் வருகிறது. அதைச் சமாளிக்க வெளிநாடு வேலைக்குப் போகிறார். கொஞ்சநாளில் மனைவி பிரியாபவானிசங்கரையும் அழைத்துச் செல்கிறார். ராகவாலாரன்ஸுக்கு முன்பே ஊர் திரும்புகிறார் பிரியாபவானிசங்கர்.அடுத்து அம்மா மரணம், மனைவி காணாமல் போதல் எனத் தொடரும் சிக்கல்கள். இவற்றை ராகவாலாரன்ஸ் எப்படி எதிர்கொள்கிறார்? அவருக்கு வந்த சிக்கல்களுக்கு என்ன காரணம்? என்பதைச் சொல்கிற படம் தான் ருத்ரன்.காதல், நடனம் ஆகியனவற்றில் அட்டகாசம் செய்யும் ராகவாலாரன்ஸ், சண்டைக்காட்சிகளில் பின்னிப்பெடலெடுக்கிறார்.பிரியாபவானிசங்கருக்கு நல்ல வேடம். முதல்பாதியில் அவருக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும் இரண்டாம்பாதியில் அதைச் சமன் செய்யுமளவுக்குக் காட்சிகள் இருக்கின்றன.பூர்ணிமா பாக்யராஜ், நாசர் ஆகியோரின் நடிப்பு அனுபவங்கள் இந்தப்படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.வில்லனாக நடித்திருக்கிறார் சரத்குமார். அவருடைய பாத்திர வடிவமைப்பும் சொத்து சேர்க்கும் முறையும் தவறான பாடங்கள்.ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கலாம். சம்.சி.எஸ் இன் பின்னணி இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் வழக்கத்தைவிட அழகாகத் தெரிகிறார் ராகவாலாரன்ஸ்.’கே.பி.திருமாறனின் கதை திரைக்கதையை வைத்துக் கொண்டு இயக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கதிரேசன். வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு அறிவுரை அல்லது எச்சரிக்கை செய்யும் கருத்தோடு வியாபாரத்திரைப்படங்களுக்குரிய எல்லா அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார் கதிரேசன்.அதிரடிச் சண்டையுடன் தொடங்கும் படம் அப்படியே மெதுவாகிவிடுவது பலவீனம்.பின்பாதி போல் முன்பாதியும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.