ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கும் எனக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை” எனக் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அந்நிறுவனத்தை நிர்வகிப்பது யார் என்பதை தெரிவிக்கவில்லை.
நடிகரும்,தமிழ்நாடுஅமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்இயக்குநர் மாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம்‘கண்ணை நம்பாதே’
அமைச்சர் பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக உதயநிதி நாயகனாக நடித்துள்ள இந்ததிரைப்படம் வரும் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதனை முன்னிட்டு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிநேற்று மாலை சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட உதயநிதி
“கண்ணை நம்பாதே 2018-ஆம் ஆண்டு தொடங்கிய படம். நெடிய போராட்டம்,நெடும் பயணத்தைத் தாண்டி படம் திரைக்கு வர உள்ளது. படம் அதீத நாட்கள் எடுத்துகொண்டது. நான்கரை ஆண்டுகால உழைப்பில் உருவான இப்படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும்” என்றார்.
தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகியது குறித்து கேட்டதற்கு,
படங்களில் நடிப்பதை நிறுத்துமாறு கூறியது பெற்றோர்கள்தான். அம்மாவுக்கு தொடக்கத்திலிருந்தே நான் சினிமாவில் இருப்பதில் பெரிய விருப்பமில்லை. மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான். தற்போது அமைச்சராகிவிட்டதால் அது ஒரு முழுநேர மக்கள் பணியாற்ற வேண்டிய சூழலிருக்கிறது. அதனால் ‘மாமன்னன்’ படத்துடன் முடித்து விடலாம் என நடிப்பை நிறுத்தி விட்டேன் என்றார்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் சம்பந்தமாக கூறுகிறபோது
நான் ரெட் ஜெயண்ட் நிறுவன பொறுப்பில் இருந்து வெளியே வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கும் ரெட் ஜெயண்டுக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. இந்தப் படத்தையும் அவர்கள்தான் வெளியிடுகிறார்கள் என்றார்
Sign in