வாரிசு – துணிவு வெல்லப்போவது?

அஜித்குமார் நடித்துள்ள ‘துணிவு’  விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ எனஇரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி நேரடியாக மோதுகிறது

கடந்த 2014-ம் ஆண்டு அஜித்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 10-ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. தற்போது 9 ஆண்டுகள் கழித்து இருவரின் படங்களான ‘துணிவு’, ‘வாரிசு’ இரண்டும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதில் 9 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ளதே தவிர, இரண்டு தரப்பு ரசிகர்களிடையேயும் அதே உற்சாகமும், ஆர்வமும் இன்றும் குறையாமலிருக்கிறது.ரவுடியாக இருக்கும் மோகன்லாலை போலீஸாக அவதாரம் எடுக்கும் விஜய் எப்படி திருத்துகிறார் என்பதுதான் ‘ஜில்லா’ படத்தின் கதை. சென்டிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட ஆக்‌ஷன் படமாக அது வெளியானது. அதேபோல அஜித்தின் ‘வீரம்’ அடிப்படையில் வில்லனிடமிருந்து ஒரு குடும்பத்தைக் காக்க போராடும் நாயகன் கதையாக திரையில் விரிந்தது. இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், ‘வீரம்’, ‘ஜில்லா’வைக் காட்டிலும் வசூலில் முதல் இடத்தை பிடித்தது.இரண்டு படங்களும் குடும்பம், தனி மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது ஜனவரி 11 அன்று வெளியாகும் படங்களில் விஜய்யின் ‘வாரிசு’ மீண்டும் குடும்ப உறவு மேன்மை, பாசத்தை அடிப்படை திரைக்கதையாக இருக்கும் என டிரைலர் உணர்த்துகிறதுவிஜய்க்கு பலம் அவரது படங்களை பார்க்கும் குடும்ப பார்வையாளர்கள் முதல் நாள் மட்டுமே அவரது ரசிகர்களின் கூட்டமும், கோஷங்களும் இருக்கும் தொடர்ந்து அரங்குகளை நிரப்புவதுகுடும்பங்களாக வரும் பார்வையாளர்கள்தான். அதனை கருத்தில் கொண்டே விஜய் கதையை தேர்வு செய்திருக்ககூடும்

நுட்பமாக பார்த்தால் 2014-ல் வெளியான அஜித்தின் ‘வீரம்’ படமும், தற்போது வெளியாக உள்ள ‘வாரிசு’ படமும் ‘குடும்பம்’ என்ற திரைக்கதையில் இணைவதை உணர முடியும்.நீண்ட காலமாக ஆக்க்ஷன் டிராமாவில் நடித்து வந்த விஜய் அவருக்கான குடும்ப பார்வையாளர்களுக்கான படத்தில் நடிக்காமல் தவிர்த்து  வந்த விஜய் ‘வாரிசு’ மூலம் மீண்டும் அந்தப் பார்வையாளர்களை தக்கவைத்துக்கொள்ள வைக்கும் ஈர்க்கும் முனைப்பில் இறங்கியிருக்கிறார். ஆனால், அஜித்தைப் பொறுத்தவரை ‘வீரம்’ படத்தை தொடர்ந்து  அதன்பிறகு வந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் தந்தை பாசத்தையும், ‘வேதாளம்’ படத்தில் தங்கை பாசத்தையும், ‘விஸ்வாசம்’ படத்தில் அப்பா – மகள் பாசத்தையும், ‘வலிமை’ படத்தில் தாய்ப் பாசத்தையும் தொடர்ந்து சென்டிமென்டை தனது படங்களில் பிரதான திரைகதையாக்கி வந்துள்ளார்

இடையில் அவர் நடிப்பில் வந்த ‘நேர்கொண்ட பார்வை’படம் பெண்களை திரையரங்குகளுக்கு கொண்டு வர முயன்றது. இதன் மூலம் அஜித் தனக்கான ரசிகர்களைத் தாண்டி, குடும்ப பார்வையாளர்களைநோக்கி நகர்ந்து வருவது தெரியும்

அவரது இந்த ஃபார்முலா வணிகரீதியாக அவருக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறது

ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் ‘விஸ்வாசம்’ மோதியபோதும் கூட அவருக்கு இந்த குடும்பசென்டிமென்ட் ஃபார்முலா பிரம்மாண்டமான வெற்றியை பெற்று தந்தது தற்போது அந்த ஃபார்முலாவை விஜய் கையிலெடுக்க, ஆக்‌ஷன் கதையை அஜித்குமார் தேர்வு செய்திருப்பதை துணிவு ட்ரைலர் உணர்த்துகிறது. அதேபோல், தமிழில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முழுநீள முதல் திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ‘துணிவு’ படத்தில் ட்ரைலரில் நிறைய விஷயங்களை வெளிப்படுத்தக் கூடாது என்பதில் இயக்குநர் ஹெச்.வினோத் உறுதியாக இருந்தார் என தெரிகிறது.மேலும், ‘துணிவு’ படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி பார்க்கும்போது, ‘மாஸ்’ நடிகர்கள் இருவருமே சென்டிமென்டை கையிலெடுத்து களமிறங்கியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. சென்டிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட இரண்டு படங்களிலும் தங்களுக்கானதை தேர்வு செய்து கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். மறுபுறம் பொது சினிமா பார்வையாளர்கள், முன்னணி நடிகர்களின் இந்த ஆக்‌ஷன் சென்டிமென்டில் இன்னும் எத்தனை நாட்கள் உழன்று கொண்டிருக்கப்போகிறோம் என்று புலம்புவதை சமூக வலைத்தள பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. இதிலிருந்து வெளியேறி அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களை நோக்கி நகர்வதே எதிர்கால வெற்றிக்கு இருவருக்கும் ஆரோக்கியமானது என்ற கருத்தையும் அவர்கள் பதிவு செய்து வருவது கவனிக்கத்தக்கது.