விக்னேஷ் சிவன்நயன்தாராவுக்கு கல்யாணம் முடிந்தது

போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், தனது இரண்டாவது படமாக ‘நானும் ரௌடிதான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம் பின்பு காதலாக மலர்ந்தது. அதன் பின் இருவரும் இணைந்து தனி வீட்டில் வாழ்ந்து வந்ததுடன்,‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் திரைப்படங்களைத் தயாரிப்பது, படங்களை வாங்கி வெளியிடுவது என சேர்ந்து பணிபுரிந்து வந்தனர்.சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகும் சமயத்தில் விரைவில் நயன்தாராவுக்கும், தனக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்பதைக் கூறி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பத்திரிகையாளர் சந்திப்பில் திருமணத் தேதியையும் அறிவித்தார் விக்னேஷ் சிவன். அதன்படி நேற்று(9.6.2022) இருவரின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.மகாபலிபுரத்தில் பிரபல ஓட்டலில், இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நண்பர்கள், உறவினர்கள் சூழ, அவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.திருமணத்துக்காக பிரம்மாண்டமான விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்திருந்தனர்.
நேற்று காலை 10.20 மணிக்கு புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு, விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
இத்திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று நடந்த திருமண விழாவில்,  ரஜினிகாந்த், ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, குஷ்பூ, விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கிருத்திகா உதயநிதி, அட்லி, நெல்சன், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கவின், மலையாள நடிகர் திலீப்
அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் ஷாலினியின் சகோதரி ஷாம்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் தயாரிப்பாளர்கள்ஐசரி  கணேஷ், போனி கபூர், Lyca தமிழ்க்குமரன், கல்பாத்தி அகோரம், ஞானவேல்ராஜா, 2D ராஜசேகர் டிரைடன் ஆர்ட்ஸ் ரவி, லலித் குமார், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சாந்தி பிலிம்ஸ் அருண், ஏஆர்.ரகுமான், ஏஆர்ஆர்.அமீன், அனிருத், ரவி ராகவேந்திரா, லக்ஷ்மி ராகவேந்திரா, கௌதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்த்தன், அனு வர்த்தன், சிவா, அட்லி, ஹரி, மோகன் ராஜா, எடிட்டர் மோகன், பிரீதா ஹரி, ஒளிப்பதிவாளர்கள் ஓம்பிரகாஷ். வெற்றி, வேல்ராஜ், தினேஷ் கிருஷ்ணன், தரண்குமார், கலா மாஸ்டர், சதீஷ், பாடலாசிரியர் தாமரை மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் நேரில் வந்திருந்து தம்பதிகளை வாழ்த்தினார்கள்.
நண்பர்கள் உறவினர்கள் சூழ, அவர்களின் ஆசீர்வாதத்துடனும், அன்புடனும் திருமணம் நடந்தாலும், இதிலும் பாலிவுட் முறையிலான நடைமுறையைக் கையாண்டிருக்கிறார்கள் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும். அதில் முதலாவது இந்த திருமணத்தை பிரத்யேகமாக பதிவு செய்ய நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மிகப் பெரிய தொகை ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு அளித்திருக்கிறது.
இந்நிலையில், திருமணம் முடிந்ததை அறிவிக்கும் வகையில் நயன்தாராவுடன் உள்ள புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டார் அதில்கடவுள், பிரபஞ்சம், எங்களது பெற்றோர் மற்றும் சிறந்த நண்பர்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் நயன்தாராவை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்
நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமண விழாவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விழாவை சிறப்பித்தார்.
பிரபல மலையாள திரைப்பட நடிகர் திலீப் இத்திருமணத்தில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியதுமேலும் தங்களது திருமணத்தையொட்டி  சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல்,  திருநெல்வேலி என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து, நயன்தாராவின் நெருங்கிய தோழியான நடிகை சமந்தா, இவர்களின் திருமணத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேலைப் பளு காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை. எனினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சமந்தா. இதேபோல் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன் ஆகியோரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல்வேறு கோயில்களுக்கு ஒன்றாக ஊர் ஊராக சென்ற நிலையில், இவர்களின் திருமணம் எப்போதும் நடைபெறும் என்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கடந்த சில ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார்போல், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருப்பதி கோவிலுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று வந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு மற்றும் அளவுக்கு அதிகமான விருந்தினர்கள் காரணமாக திருமணத்தை நடத்த முடியாமல் போனநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை முதல்முறையாக விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தாரஅதன்படி இன்று பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே, சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமண நிகழ்வின்போது மணமகன் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்ததாகவும், அதன்பின்னர் மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலிகட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துடன், நடிகை நயன்தாரா ‘சந்திரமுகி’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகியப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ‘குசேலன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், ‘சிவாஜி’ படத்தில் ஒரு பாடலுக்கும் ரஜினியுடன் நயன்தாரா சேர்ந்து நடித்துள்ளார்.இதனால் இவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்ததன் காரணமாக, தங்களது வாழ்வின் மிக முக்கிய தருணத்தில், ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நயன்தாரா ஜோடியாக நடித்த கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் என அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது திருமணத்திற்கு முதல்நாளே விழா நடைபெறும் விடுதியில் விருந்தினர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இருந்தபோதிலும் சென்னையில் இருந்து திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் கலையிலேயே வந்தனர் நயன்தாராவால் எப்போதும் எவர்கிரீன் நாயகன் என கூறப்படும் அஜீத்குமார் திருமணத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மனைவி, குழந்தைகள் மட்டுமே கலந்துகொண்டனர் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமைதனியார் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டதால் அஜீத்குமார் மட்டுமின்றி அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரபலங்கள் திருமண விழாவிற்கு வருவதை தவிர்த்திருக்கின்றனர் அதனால் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்