தமிழ் சினிமாவில் எம்.கே.தியாராஜ பாகவதர் காலம் முதல் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார் இவர்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் எல்லாம் எத்தனை வாரங்கள், 50 நாட்கள், நூறு நாட்களை கடந்து எத்தனை திரையரங்குகளில் ஓடியிருக்கின்றன என்பது பெருமைக்குரியவையாக பார்க்கப்பட்டது1990 களுக்கு பிறகு முதல் நாள் வசூல், முதல் வாரமொத்த வசூல் முதன்மைபடுத்தப்பட்டு நடிகர்களின் அடுத்த படத்திற்கானசம்பளம், படத்தின் விலையை தீர்மானிக்கும் காரணியாக மாறியது லட்சங்களில் படம் தயாரித்து லட்சங்களில் லாபம் பார்த்த தமிழ் திரையுலகில் இப்போது கோடிகளில் முதலீடு செய்து அதனை முதல் வாரத்தில் வசூல் மூலம் எடுத்தாக வேண்டும் என்கிற மனநிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உள்ளனர் அதேவேளையில்
பிற மொழி பட தயாரிப்பாளர்கள் அந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் துணையுடன் முயற்சி மேற்கொண்டனர் ஆனால் தமிழ் சினிமாவில் படத்தில் நடித்ததுடன் எனது வேலை முடிந்தது என அடுத்த படத்தில் நடிக்க போனார்கள் நட்சத்திரங்கள் அதனால் எதிர்பார்த்த வெற்றியும், அபரிமிதமான வசூலும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. கோடிகளில் சம்பளம் வாங்கிய கதாநாயகர்களின் படங்களுக்கு கோடிக்கணக்கில் வசூல் ஆனாலும் படத்தயாரிப்பில் செய்த முதலீட்டிற்கு உரிய லாபம், இரு மடங்கு, மும்மடங்கு லாபம் என்பது தமிழ் கதாநாயகர்கள் நடித்த படங்களின் மூலம் கிடைக்கவில்லை அதே வேளையில் சிறு முதலீட்டு படங்கள், புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி படைப்புரீதியாக வரவேற்புக்குள்ளான படங்கள் மூலம் இரு மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன் இதுவரை தமிழ் சினிமாவில் வசூல் அடிப்படையில் இதுவரை நிகழ்த்தப்பட்ட எல்லா சாதனைகளையும் விக்ரம் படத்தின் மூலம் முறியடித்திருக்கிறார் விக்ரம் படம் வெளியான இரண்டாவது வார முடிவில் நடைபெற்ற விக்ரம் வெற்றி விழா நிகழ்ச்சியில் இந்த வெற்றி எனது தனிப்பட்டது இல்லை கூலி தொழிலாளி முதல் கோடீஸ்வரர்கள் வரை விக்ரம் படம் பார்ப்பதற்காக தங்கள் வருமானத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்ததால் கிடைத்த வெற்றி என்றார். படத்தை தயாரித்த நான் முதல் கடைகோடி கிராமத்தில் இருக்கும் தியேட்டரில் கார் பாஸ் கொடுப்பவர் வரை ஒரே நேர்கோட்டில் பணிபுரிந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது என்றார் கமல்ஹாசன் அவரது 60 ஆண்டுகால திரைப்பயணத்தில் வெற்றிகளையும், தோல்விகளையும் சம அளவில் எதிர்கொண்டவர் ஹீரோ என்கிற கர்வம் இல்லாமல், எனக்கத்தான் படம் ஓடியது என்று நான் கூறமாட்டேன் சினிமா கணக்கு விபரங்களை வெளிப்படை தன்மையுடன் பகிர்ந்து கொண்டாலே சினிமா தொழில் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியதுடன் மட்டுமல்லாமல் விக்ரம் படத்தின் இரண்டு வாரமொத்த வசூலை சம்பந்தபட்ட ஏரியா விநியோகஸ்தர்களை பகிரங்கமாக அறிவிக்க செய்தார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த ‘விக்ரம்’ படம் ஜுன் 3ம் தேதி வெளிவந்தது. நான்கு வாரங்களை இந்தப் படம் நிறைவு செய்து 256 திரைகளில்நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில்தமிழ் சினிமாவின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளை முறியடித்து சுமார்180 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது
நம்பர் 1 வசூல் படமாக இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த நான்காவது வாரத்திலும் நூற்றுக்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
Related Posts
மூன்று வார முடிவில் இந்தப் படம் 380 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் கமல்ஹாசன் படமாகியுள்ளது விக்ரம்2018-ம் ஆண்டு வெளியான ரஜினியின் 2.O உலகம் முழுவதும் ரூ.655 கோடி வரை வசூலித்தது
2006-ம் ஆண்டுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் கமர்ஷியல் சினிமாவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ‘உன்னப்போல் ஒருவன்’, ‘மன்மதன் அம்பு’, ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’, ‘தூங்காவனம்’ ‘விஸ்வரூபம் 2’ என்று வெளியானாலும் வணிகரீதியாக வெற்றியை பெறவில்லை கமல்ஹாசன் நடிப்பில் கமர்ஷியல் ஹிட் என்றால் ‘பாபநாசம்’ படத்தை மட்டுமே கூற முடியும் கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் திரையரங்குகள் மூலம்400 கோடி ரூபாய் மொத்த வசூல் என்பதும் இதனை தென்னிந்திய அளவில் தமிழ் கதாநாயகர்கள் நடிப்பில் வெளியான முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்திருக்கிறது என்பது சாதனையாக கமல்ஹாசனும், தமிழ் சினிமாவும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் ஆனால் அகில இந்திய அளவில், சர்வதேச அளவில் தமிழ் சினிமா முன்னணி கதாநாயகர்கள் நடித்து வெளியான எந்தப் படமும் இன்றுவரை தெலுங்கு, கன்னட படங்கள் நிகழ்த்திய சாதனைகளை நெருங்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது உலக அளவில்பாகுபலி-2 1810 கோடி, கேஜிஎஃப்-1230 கோடி,ஆர் ஆர்ஆர்-1100 என்கிற அளவில் மொத்த வசூல் செய்திருக்கிறது இதற்கு காரணம் அந்தப் படங்களில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் இயக்குநரை நம்பி தங்களை ஒப்புக்கொடுத்து சொன்னபடி நடித்தார்கள், படம் வெளியீட்டுக்கு முன்பாக அடித்தட்டு மக்கள் வரைபடத்தை பற்றிய தகவல்களை கொண்டு சேர்க்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் இன்று வரை அது நிகழவில்லை ஆனால் கமல்ஹாசன் இன்றைய இளம் தலைமுறை இயக்குநர் லோகேஷ் கனகராஜை நம்பி நடித்தார், படத்தை புரமோட் செய்வதற்காக உலகம் முழுவதும் பயணம் செய்தார் 400 கோடி மொத்த வசூல் என்பது சாத்தியமானது இதனை பிற நட்சத்திரங்களும் கடைபிடித்தல் தமிழ் சினிமா 1000ம் கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டிப் பிடிப்பது எளிதானதாகும்.