விஜய் சேதுபதியுடன் இணையும் நித்யா மேனன்

மலையாள படமான19/1/A படத்தில் இணைந்து நடித்த நித்யா மேனன் – விஜய் சேதுபதி கூட்டணி தமிழ்படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் சூர்யா நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான  ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து  அவர் புதியபடங்கள் எதையும் இயக்கவில்லை.

இந்நிலையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார்.. இந்தப் படத்தை சத்ய ஜோதிபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். பெயரிடப்படாத இந்தப்
படத்தின் படப்பிடிப்பு  ஏற்கெனவே தொடங்கி  நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி தவிர்த்து பிற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படாத நிலையில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.