விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் DSP படம் 2022 டிசம்பரில் வெளியாகும் என்றுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.பொன்ராம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வையை நவம்பர் 10 அன்று முதல் பிரதி தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் வெளியிட்டமுதல்பார்வை டிசைனை பார்த்த திரையுலகினருக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம் எழுந்தது படத்தின் முதலீட்டு தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் பெயர் அதில் இடம்பெறவில்லை எந்தவிதமான முதலீடும் செய்யாமல் முன் தொகை வாங்கி திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து தரும் வேலைகளை செய்து தரும் நிறுவனங்கள் படத்தை விலைக்கு வாங்கி வெளியிடுவது போன்று விளம்பரங்களிலும், படத்திலும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இடம் பெற செய்கின்றனர் சன்பிக்சர்ஸ் ஏற்கனவே
2021 மார்ச் 17 ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டது.
அதில் விஜய்சேதுபதியின் 46 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பதும் முதல்பிரதி அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்துக் கொடுக்கிறது ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இப்போது படம் முழுமையாகத் தயாராகி வெளியீட்டுக்கு வரும் நேரத்தில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறாதது ஏன்? என்கிற கேள்வியை சன் பிக்சர்ஸ் தரப்பில் கேட்டால் குழப்பமான பதில் ஒன்ற கூறுகின்றனர் இனிமேல்சன் பிக்சர்ஸ் நேரடியாகத் தயாரிக்கும் படங்களில் மட்டும்தான் பெயர் இடம்பெறுமுதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கும் படங்களில் பெயரை போடுவதில்லை என்கிற முடிவெடுத்திருக்கிறது நிர்வாகம் என்று கூறுகின்றனர் ஆனால் DSP படத்தை பார்த்த சன் பிக்சர்ஸ் நிர்வாகத்துக்கு படம் பிடிக்கவில்லை அப்படி ஒரு படத்தை நாம் தயாரித்ததாக இருக்க வேண்டாம்
என்பதால் பெயரை தவிர்த்துவிட்டார்கள் என்கிற தகவலையும் சொல்கிறார்கள்