விஜய்சேதுபதி,சூரி,கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை. இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். எல்ரெட்குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெய்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது.ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம்உருவாகிறது.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்விடுதலை படம் தமிழ் சினிமாவில் தற்போது தயாரிக்கப்படும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளதுசுமார் நான்கு கோடி பட்ஜெட் என திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட விடுதலை படத்திற்கு தற்போது 40 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளது அதனால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளார் வெற்றிமாறன் அப்போது தான் படத்தின் மொத்த செலவையும் வணிகரீதியாக எடுக்க முடியும் இதனை இன்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவித்திருக்கிறார்கள்.வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் சொல்லி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது தயாரிப்புநிறுவனம்.அதில், எங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும், இந்த சிறப்பு நாளில் விடுதலை படம் இரண்டு பாக காவியமாக தயாரிக்கப்படுகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்கள்.
Sign in