அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி வெளியாகியிருக்கும் படம் வீரவணக்கம்.
அந்தக் காலகட்டத்தில் பெரும் புரட்சிக்காரராக இருந்த பி.கிருஷ்ணபிள்ளை வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் அந்த வேடத்துக்கு உருவம் கொடுத்ததோடு உயிரும் கொடுத்திருக்கிறார் நடிகர் சமுத்திரக்கனி.
பொதுவுடைமைவாதியாக நடித்திருக்கும் பரத், கவனம் ஈர்க்கிறார். அவர் வரும் காட்சிகள் வசனங்கள் மற்றும் அவர் நடிப்பு ஆகியன சிறப்பு
போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ், காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் பிரேம்குமார் மற்றும் மேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, ஆதர்ஷ், ஆய்ஷ்விகா ஆகியோரும் நன்று.
கவியரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவும் நேர்த்தியும் அமைந்திருக்கிறது.அந்த கால கட்டதைகண்முன் கொண்டு வந்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர்இசையமைத்திருக்கிறார்கள்