வெற்றிமாறனிடம் கேளுங்கள் சரத்குமார் காட்டம்

இயக்குநர் வெற்றி மாறன் கூறியிருக்கும் கருத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள்” என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், ”பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த கேரக்டருக்கு நான் பொருந்துவேன் என்கிற எண்ணம் மணிரத்னத்திற்கு உதித்தது மிகப் பெரிய விஷயம். வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.படத்தைப் பார்த்து பலரும் எனக்கு போன் செய்தார்கள். இந்த படம் மிகப்பெரியவெற்றிஅடைந்துள்ளதைநினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவர் மத்தியிலும் சென்றடைந்திருக்கிறது” என்றார்.மேலும், ”குறை சொல்பவர்கள், அந்தக் குறையை இயக்குநரிடம் சென்று இப்படி சித்தரித்து இருக்கிறீர்களே என்று கேட்க வேண்டும். தவறு இருக்கிறது என்றால் இயக்குநரிடம் சொல்ல வேண்டும். வெற்றிமாறன் ஒரு கருத்தினை பதிவு செய்திருக்கிறார். இது ஜனநாயக நாடு. சுதந்திர நாடு. யார் என்ன கருத்து சொல்ல விரும்புகிறார்களோ அதைச் சொல்ல அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அவர் கருத்து சொல்லி இருக்கிறார் என்றால் அதை யாரிடம் கேட்க வேண்டுமோ, அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.என்னைப் பார்த்து அந்த கருத்தை கேட்டால் நான் சொல்லும் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுமா? படத்தில் நடித்ததினால் என்னிடம் கேட்க வேண்டுமா? இயக்குநரிடம் சென்று கேளுங்கள். “இப்படி சித்தரிக்கப்பட்டது தவறு என்று நினைக்கிறோம். இப்படி படத்தில் சொல்லி இருக்கிறீர்கள்” என்று நீங்கள் ஜெயமோகனிடம் கேளுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்” என தெரிவித்தார்.