அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும்படம் ‘கிங்ஸ்டன்’. ஜி.வி.பிரகாஷ் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படம், வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது
இந்தப் படம் நம்ம ஊர் ‘ஹாரிபாட்டர்’, ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ மாதிரி இருக்கும்னு நம்பிக்கை இருக்கு. ஏன் நம்ம ஊர்ல அப்படியொரு படம் வரக்கூடாது?நம்ம ஊர் பசங்க இந்தப் படத்துக்கு VFX, கிராபிக்ஸ் வேலைகள் பார்த்திருக்காங்க. இந்தியாவே திரும்பிப் பார்க்கிற மாதிரி இருக்கும் இந்தப் படத்தோட காட்சிகள். இந்தப் படத்தை அடுத்தடுத்த சீரிஸ் எடுக்கும் அளவிற்கு வரவேற்பைப் பெறணும். அதுல அவ்வளவு விஷயம் இருக்கு. நம்ம சினிமாவ பார்த்து ஹாலிவுட் காரங்க வியக்கணும் கடுமையாக உழைச்சிருக்கோம். நல்ல வரவேற்பைக் கொடுங்கள்” என்றார்.