ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் பிரபாஸ் 3 படங்களுக்கு ஒப்பந்தம்!

கன்னடத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’, ‘காந்தாரா’, ‘சலார் 1’ படங்களை தயாரித்து வசூலில் வெற்றி கண்டது ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக ‘காந்தாரா 2’, ‘சலார் 2’, ‘கேஜிஎஃப் 3’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க நடிகர் பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தொடர்பாக ஹோம்பாலே நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் அடுத்த 3 திரைப்படங்களுக்காக நடிகர் பிரபாஸுடன் இணைகிறோம்.
‘சலார் 2’ உடன் இந்தப் பயணம் தொடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 2026-ல் ‘சலார் 2’ வெளியாகிறது. மற்ற 2 திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ‘ராஜசாப்’, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’, ‘கல்கி 2’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.