அபராஜித் கணேஷ் ரகு தயாரிக்கும் புதிய படம் தொடக்கம்

பாலா இயக்கத்தில்‘நந்தா’, அமீர் இயக்கத்தில்  ‘மௌனம் பேசியதே’ படங்களைத்  தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படத்தின் தொடக்க நிகழ்வு படப்பிடிப்புடன் சென்னையில் தொடங்கியது
இப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில், சேரன் clap – in சொல்ல, சசிக்குமார் camera on செய்ய, அமீர் clap அடித்து, பாலா action சொல்ல, முதல் காட்சியை இயக்குநர் பாலா படமாக்கினார்
இயக்குனர் SA சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமதி் பூர்ணிமா பாக்யராஜ மற்றும் இயக்குனர்
கரு பழனியப்பன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நந்தா-மௌனம் பேசியதே படங்களுக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்த நிலையில் முதன்முறையாக இசைஞானி’இளையராஜா
நெகிழ்ச்சியான கதைக்களமும், ஊக்கமளிக்கும் திரைக்கதையும் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு,  இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு, வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுத, பாலுமகேந்திரா கலை இயக்கத்தில், பூபதி வேதகிரி படத்தைத் தொகுக்க, மீரா ஆடை வடிவமைக்க,  பாலு ஸ்டில்ஸ் எடுக்க, பழநி அமாவாசை உடைகள் வடிவமைக்க, ஒலிக்கலவையை ஹரிஷ் கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிக்க, கோபி பிரசன்னாவின் விளம்பர வடிவமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பை விஜயகுமார் R S, காசி வர்மன் கவனிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.