ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரித்திருக்கும் புதிய படம் ப்ளாஸ்ட்,அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன்,
ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்க்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்
இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில்
இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், ‘
‘இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.
இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
‘பிளாஸ்ட்’ ஆக்க்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில்,
”தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.
புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன்.
ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் ‘ஜூம்’ செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை ‘ஜூம்’ செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கே ஜி எஃப்’ படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,” என்றார்.
நடிகர் அர்ச்சுன் பேசியதாவது
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல் ஏஜிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது.நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்க்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்க்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.